திசையன்விளை ஜெயந்திநாதர் ஐ.டி.ஐ & தொழிற்பள்ளியின் சிறப்பு
திசையன்விளை ஜெயந்திநாதர் ஐ.டி.ஐ & தொழிற்பள்ளியின் கல்விச் சேவை மற்றும் சமூகச் சேவையில் 18வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பது ஐ.டி.ஐ-யின் கல்விப் பணிக்குமகுடம் சேர்க்கிறது.
ஏழைகளின் வாழ்க்கை வளம் பெறவும் எளிய மாணவ மாணவிகளின் கல்விதரம் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காகவே திசையன்விளையில் ஜெயந்திநாதர் ஐ.டி.ஐ. தொழிற்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. பணம் இருந்தால் மட்டுமே ஐ.டி.ஐ-யில் சேர்ந்து படிக்க முடியும் என்ற இந்தகாலகட்டத்தில் “நன்கொடை எதுவும் இல்லாமல்” குறைந்த செலவில் சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. 10ம் வகுப்பு, +2 தேர்வில் வெற்றி தோல்வியடைந்த ஆண் பெண் இரு பாலர்களும் வாழ்வில் முன்னேற்றம் அடைய இரண்டு ஆண்டு மற்றும் ஓராண்டு மத்திய மாநில அரசு பயிற்சிகள் நடத்தப்படுகிறது.
கல்விகற்கின்ற மாணவர்களுக்கு அரசு உதவி தொகையும் சுய தொழில் செய்வதற்கு வங்கிகளில் இருந்து கடன் உதவியும் பெற்று தரப்படுகிறது. சுயதொழில் செய்வதற்கு ஆலோசனையும் வழங்கப்படுகிறது.
மாநில சிறப்பு விருது
ஜெயந்திநாதர் தொழிற்பயிற்சி பள்ளியின் மரைன் டீசல் மெக்கானிக் தொழிற்பிரிவு மாணவாகள்; கடந்த 2006 மற்றும் 2007ம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மாணவர்களாக வெற்றி பெற்றதன் மூலம் ஜெயந்திநாதர் தொழிற்பள்ளிக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மாநில சிறப்பு விருது தொடர்ந்து 2 ஆண்டுகளாக வழங்கி கௌரவிக்கப்பட்டுவருகிறது.




