ஜெயந்திநாதர் தொழிற்பயிற்சி பள்ளியின் தொழிற்பிரிவுகள்

ஐ.டி.ஐ-யில் பொருத்துநர் (FITTER) மற்றும் தொழிற்பள்ளியின் மோட்டார் மெக்கானிக் (MVM) ஆட்டோமொபைல் மெக்கானிக் ரெப்ரிஜிரேஷன் & A/C மெக்கானிக் (MRAC) எலக்ட்ரீசியன் எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக் டெக்னிஷியன் மற்றும் மரைன் டீசல் மெக்கானிக் ஆகிய பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்பட்டு பயிற்சிகளுக்கு மத்திய, மாநில அரசின் அங்கீகாரத்துடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யத்தக்க அரசு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

  • பொருத்துநர்(FITTER)

    பொருத்துநர் பிரிவில் பயிற்சி பெறும் மாணவர்கள் Fitting, Sheet Metal Works, Turning, Plumbing, Welding, Black Smithy Works போன்ற வேலைகளில் சொந்தமாக தொழில் தொடங்குவதற்கு ஏற்ப திறமையுடன் பயிற்சி முடித்து வெளியேவருகின்றனர். இவர்களின் திறமைகளை மேலும் வளர்க்க CNC Lathe, Drilling, Milling, Shaping Machine போன்றவைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • மோட்டார் வாகன மெக்கானிசம் & மெயின்டனன்ஸ (MVM)

    மாருதி, இன்னோவோ, அம்பாசிடர், போர்டு, லேன்சர், பென்ஸ், சேன்ட்ரோ, இண்டிகா, லாரி, பஸ், டாரஸ், ஜே.சீ.பி, பொக்கலைன் மற்றும் டிப்பர் போன்ற அனைத்து இரு சக்கர மற்றும் நான்குசக்கரவாகனங்களை பழுது பார்ப்பதற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்களின் நலன் கருதி வெளி இடங்களில் உள்ள TVS, Susee Auto, S.G., ஜெயராஜ் நாடார் & Co., BMC, Anamalais Toyota, Tata, Leyland, L&T போன்ற பெரிய நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்று பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.
  • ரெப்ரிஜிரேஷன் A/C மெக்கானிசம் & மெயின்டனன்ஸ் (Ref a/c & M),

    அதிகமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புள்ள தொழிற்பிரிவு A/C ரெப்ரிஜிரேஷன் மெக்கானிக் ஆகும். இதில் குளிர்சாதன பிரிவுகளான வாட்டர் கூலர், பிரிட்ஜ், ஏர்கூலர் மற்றும் வீடுகளிலும், வாகனங்களிலும் உள்ள ஏசியை பற்றியும், Central Plant பற்றியும் அவற்றில் அதிகமாக பயன்படும் கம்ப்ரசர் போன்றவைகளைப் பற்றியும் அவற்றை பழுது பார்ப்பதற்குரிய செய்முறை பயிற்சியும் சிறப்பாக அளிக்கப்படுகிறது.
  • எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக் டெக்னிஷியன்

    நாட்டின் இயக்கத்திற்கு உயிர் நாடியான மின்சாரம் எல்லா வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும், வெளியிலும் பயன்படுத்தப்படும் பொருட்கள், கருவிகள், இயந்திரங்கள் அனைத்திலும்; பயன்பட்டு வருகிறது. பயன்படுத்த தெரிந்தநாம் பழுதுநீக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக மோட்டார், ஸ்டாட்டர், பேன் ஜெனரேட்டர்,வைண்டிங்,Multi Plants, வீட்டு மற்றும் தொழிற்சாலை வயரிங்பேனல் போர்டு, கேபிள்வொர்க் மற்றும் பழுதுபார்த்தல் கற்றுத் தரப்படுகின்றன.
  • கடல்சார் கல்வி புரட்சியில் ஜெயந்திநாதர் மரைன் டெக்னாலஜி இன்ஸ்ட்டியட்

    தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக தமிழக அரசு அங்கீகாரத்துடன் ஜெயந்திநாதர் மரைன் டெக்னாலஜி இன்ஸ்ட்டியட்டில் தான் இந்தமரைன் டீசல் மெக்கானிக் தொழிற்பிரிவு பயிற்றுவிக்கப்படுகிறது. மாணவர்கள் நேரடியாக கப்பல்களில் பயிற்சிக்கு அனுப்பப்படுகிறார்கள். கடந்தவருட மாணவர்கள் மத்திய INS (Indian Navy Sservice) கட்டபொம்மன் சென்று பார்வையிட்டு தங்களுடைய பயிற்சி திறனை மேலும் வளர்த்துக் கொண்டனர்.